உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாமலுக்கு லண்டனில் நடப்பவை கடந்த காலச் செயல்களின் அறுவடை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் செல்வதற்கோ அல்லது அங்கு அவருக்கு எதிராகப் போராட்டங்கள் நடப்பதற்கோ தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பல்ல.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

லண்டன் பயணத்தின் போது நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகப் புலம்பெயர் அமைப்புகள் முன்னெடுத்து வரும் எதிர்ப்புகள் மற்றும் கேம்பிரிட்ஜ் உரை இரத்துச் செய்யப்பட்டமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் கூறுகையில்,
“நாமல் ராஜபக்ஷ லண்டன் செல்வதற்கு இந்த அரசு எந்தத் தடையையும் விதிக்கவில்லை. ஆனால், அவர் அங்கு செல்லும் போது மக்கள் ஏன் கறுப்புக்கொடி காட்டுகின்றார்கள், ஏன் அவரது உரையை இரத்துச் செய்யச் சொல்கின்றார்கள் என்பதை அவர்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகளின் விளைவைத்தான் இன்று சர்வதேச ரீதியாக அறுவடை செய்கின்றார்கள். அதற்கும் எமது அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தமது தோல்விகளுக்கும், சர்வதேச ரீதியாகத் தமக்கு ஏற்படும் அவமானங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பழிபோடுவது ராஜபக்ஷக்களின் வழக்கமான பாணியாகிவிட்டது. லண்டனில் இருப்பவர்கள் தன்னிச்சையாகப் போராடுகின்றார்களே தவிர, நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமக்கு செல்வாக்கு இல்லை என்பதை ராஜபக்ஷ தரப்பினர் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

அவர் லண்டனில் உரை நிகழ்த்துகின்றாரா, இல்லையா என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைகள் இங்கு சட்டப்படி தொடரும். வெளிநாடுகளில் தப்பித்து ஓடி ஒளிந்தாலும், மக்கள் பணத்தைச் சூறையாடியவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.” – என்று அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் காரசாரமாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0