உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

கொழும்பு, வாழைத்தோட்டம் – சஞ்சியாராச்சி வத்தை பகுதியில் அமைந்துள்ள இருண்ட மற்றும் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்டத்தரணி ஒருவர் கெசல்வத்தை பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், களுபோவில – சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 130 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், அதனை உட்கொள்ள பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள் மற்றும் சட்டத்தரணி அடையாள அட்டை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைத்தோட்டம் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறித்த இருண்ட கைவிடப்பட்ட கட்டிடத்திற்குள் நுழைந்து மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபர் ‘ஐஸ்’ போதைப்பொருளை பயன்படுத்திக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையை பரிசோதித்த போது, அவர் 1996ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவியேற்ற நபர் என்பதும், புதுக்கடை நீதவான் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சட்டதரணி என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0