உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 08.02.2026

ராசி பலன்கள் 6 மாதங்கள் முன்
15 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. விடுமுறை நாள் தானே என்று கொஞ்சம் தாமதமாக எல்லா வேலைகளையும் தொடங்க கூடிய சூழ்நிலை உருவாகும். இருந்தாலும் அன்றாட வேலையில் எந்தவிதமான பின்னடைவும் வேண்டாம். இன்றைக்கான வேலையை, இன்றே முடிப்பது மிகவும் நல்லது. சோம்பேறித்தனம் விலக உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். விடுமுறை நாளையும் தாண்டி உங்களுடைய கடமைகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கும் இந்த நாளில் கிடைக்கும் கவலை இல்லை.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கும். வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையை தொடங்குவீர்கள். உங்களுடைய சுறுசுறுப்பு இந்த நாளை இனிமையாக்கி, உங்கள் கையில் கொடுக்கப் போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பின்னடைவு நீங்கும். திறமை வெளிப்படும். பேச்சாற்றல் வெளிப்படும். மனதில் உள்ள விஷயங்கள் அத்தனையையும் வெளிப்படையாக பேசி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மன நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மை நடக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இதுநாள் வரை எதிரியாக இருந்தவர்கள் கூட, நண்பர்களாக மாறுவார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். டார்கெட்டை சரியாக முடித்து வருவீர்கள். சிக்கல்கள் விலகும் சொத்து சேர்க்கை இருக்கிறது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தலை நிமிர்ந்து இருக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். அவமானங்கள் விலகும். எந்த இடத்தில் எல்லாம் உங்களுடைய பெயர் கெட்டுப் போனதோ, அந்த இடத்திலேயே உங்களுடைய பெருமைகளை நிலை நாட்ட போகிறீர்கள். சந்தோஷத்திற்கு அளவு இருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நேர் வழியிலேயே இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். அதிர்ஷ்டத்தால் நீங்கள் பல நன்மைகளை அடைய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். சுப செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உயர்வு உண்டாகும். நீங்கள் இருக்கும் நிலைமையில் இருந்து ஒரு படி முன்னேறிச் செல்ல கடவுள் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்க போகின்றான். அதையெல்லாம் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம். செலவை குறைத்து பொறுப்போடு நடந்து கொண்டால் நிறைய நன்மைகள் இன்று நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கை நிறைய பணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாள் முதலீடு நல்ல இலாபத்தை கொடுக்கும். வியாபாரம் முன்னேற்றத்தோடு செல்லும். நீங்கள் விற்க வேண்டும் என்று நினைத்திருந்த சொத்துக்களை இலாபத்தோடு விற்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இலாபத்தோடு சில பொருட்களை வாங்குவதற்கும் வாய்ப்புகள் இன்று நன்றாக அமைந்திருக்கிறது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொதுப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனநிறைவோடு இந்த நாளை கடந்த செல்வீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மனதிற்கு அமைதியை தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வேகத்தை விட விவேகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். உங்களை நம்பி ஒப்படைத்த வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். பெரிய அளவில் வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் கூட உங்களுடைய திறமையால் ஒன்றுமே இல்லாமல் காணாமல் போய்விடும். கவலைப்படாதீர்கள். கடவுளை ஆசி உங்களுக்கு இருக்கு.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொஞ்சம் வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய வேலைகள் இருக்கும். கொஞ்சம் ஓய்வு எடுக்க முடியாத சூழ்நிலை உண்டாக்கும். இதனால் ஆரோக்கியத்தில் சில பல பிரச்சினைகள் வரலாம். மற்றபடி இந்த நாள் இனிய நாளாக தான் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0