உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 25.01.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உங்களுடைய முன்னேற்றத்தில் அடுத்தவர்களையும் சேர்த்துக் கொள்வீர்கள். மனநிறைவோடு இந்த நாள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். மன கசப்பு நீங்கும். நல்ல நிம்மதியும், நல்ல தூக்கமும் உங்களுக்கு கிடைக்கும். இன்று இறைவனுக்கு நன்றி சொல்ல மறவாதீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக் கொள்வீர்கள். பிரச்சினைகளை கண்டு துவண்டு போக மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள் இளைஞர்களுக்கு எல்லாம் எதிர்பாராத முன்னேற்றமும் வாய்ப்புகளும் வீட்டுக் கதவை தட்டும். சந்தோஷம் இரட்டிப்பாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். சின்ன பதட்டம் மனதிற்குள் இருக்கும். நீங்கள் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் இன்று நல்லபடியாக தான் நடந்து முடியும். இறைவனின் மீது பாரத்தை போடுங்கள். பதட்டத்தை விட்டு விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள் நல்லதே நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு இருக்கும். நிதிநிலைமை சீராகும். நிறைய நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்களை எல்லாம் மீண்டும் தொடங்கலாம். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவிருக்காது. மனதிற்கு பிடித்த நபரை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் சின்ன சின்ன புது எதிரிகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் கவனம் தேவை .

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பிரச்சினைகள் இருக்கும் நாளாக இருக்கும். பிரச்சினைகள் வந்தாலும் அதற்கான உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கடவுள் உங்களுக்கு மனித ரூபத்தில் வந்து உதவி செய்து விடுவார். கவலைப்படாதீர்கள் சோம்பேறித்தனம் வேண்டாம். பிரச்சினைகளை கண்டு பயப்பட வேண்டாம். துணிந்து நின்றால் நிச்சயம் வெற்றி உங்களுக்கு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக வேண்டும். செலவுகள் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீட்டில் கவனம் தேவை. கடன் வாங்க வேண்டாம். புதிய முயற்சிகளை கூட நாளை தள்ளிப் போட்டால் நல்லது தான். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால் போதும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதில் இருந்த தேவையில்லாத அழுக்கை எல்லாம் தூக்கி வெளியில் போட்டு விடுவீர்கள். சந்தேக குணம் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பகை விலகும். நீண்ட நாள் நீங்கள் எதிர்பார்த்த ஒரு நல்ல வாழ்க்கை உங்களைத் தேடி வரும். கைநழுவ விட வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மதிப்பும் மரியாதையும் கூட கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்து உயரும். வேலை செய்யும் இடத்திலும் சரி, வியாபாரத்திலும் சரி, நீங்கள் இருக்கும் நிலையை விட ஒரு படி உயரப் போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். ஈகோ விலகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். உறவுகளுக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். மேலும் நன்மையை பெறலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன விஷயங்களை தவற விடுவீர்கள். மனதிற்குப் பிடித்தவர்களோடு இருக்கும் நேரம் குறையும். இதனால் கொஞ்சம் வருத்தம் உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் பிரஷர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கவலைப்படாதீர்கள் எல்லாம் இன்று இரவுக்குள் சரியாகிவிடும். இரவு நிம்மதியும் நல்ல தூக்கமும் கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0