எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? – நாடு திரும்பிய கையோடு பிரதமர் கேள்வி!
நாடாளுமன்றத்தில் நேற்று பிற்பகல் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “எனக்கு எதிராக முன்வைக்கப்படும் எனக் கூறப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே? அதை எதிரணி மீளப்பெற்றுவிட்டதா?” என்று கேள்வி எழுப்பினார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து அவசரமாக திரும்பிய பிரதமர், சிரித்தபடியே “நம்பிக்கையில்லாப் பிரேரணை வரும் என்றுதானே நான் வந்தேன், அந்தப் பிரேரணை எங்கே?” என வினாவை தொடர்ந்தார்.சபையில் உரையாற்றும் பொழுதே, எதிரணிக்கு உரிய பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.