உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு தண்டப்பணம் விதிப்பு..!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
20 பார்வைகள்

சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து   சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறகர் பகுதியில் அனுமதி வழங்கப்படாத இடத்தில் மண் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கடந்த வியாழக்கிழமை(22) சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பொலிஸ் குழுவினரும் மல்வத்தை விசேட அதிரடிப்படையினரும் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது மண் அகழ்வில் ஈடுபட்டவர்கள் தப்பி செல்வதற்காக உழவு இயந்திரத்துடன் வீதி வழியாக  சென்ற போது குறித்த சோதனை நடவடிக்கையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டதுடன் 3 உழவு இயந்திரங்கள் உட்பட  3 சந்தேக நபர்களையும் மணலுடன் கைது செய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர் இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட  3 உழவு இயந்திரத்தில் ஒரு உழவு இயந்திரம் மேல் விரிப்பு இன்றி ஏற்றப்பட்ட  மணலை  பாதுகாப்பு குறைபாட்டுடன் கொண்டு  சென்றமையினால் கைப்பற்றப்பட்டதாக எமது செய்தியாளர்  பாறுக் ஷிஹானிடம் பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.

பின்னர் இன்று  கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரங்கள் மற்றும்  கைதான மூவர் அடங்கலாக சான்றுப்பொருட்கள் யாவும் சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்ட 3 உழவு இயந்திரம் உட்பட மூவருக்கு ரூபா 1 இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டார்.

குறித்த சோதனை நடவடிக்கையில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின்  ஆலோசனையின் பிரகாரம்  சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில்  பொறுப்பதிகாரி பெரேரா   வழிகாட்டலில்  ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பல்வேறு குற்றச் செயல்கள் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியுமான  என். றிபாய்டீன் தலைமையிலான  பொலிஸ் குழுவினர்  மற்றும் மல்வத்தை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து    இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

47 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

53 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

57 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0