உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு; சிக்கிய சந்தேக நபர்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
19 பார்வைகள்

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில் கடந்த 18ஆம் திகதி வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (22) நாரஹேன்பிட்டி பகுதியில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்ட தங்க நெக்லஸுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தியபோது, சொத்துக்களை அப்புறப்படுத்தியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விசாரணைக்கமைய பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 62 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 03 திருடப்பட்ட கைக்கடிகாரங்கள், ஒரு ஜோடி தங்க காதணிகள் மற்றும் 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் 02 வாசனை திரவிய போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆண் சந்தேக நபர்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேக நபர் 29 வயதுடையவர் எனவும், அவர்கள் நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

2 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0