உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பராசக்தி திரைப்படம் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல். !

சினிமா 7 மாதங்கள் முன்
25 பார்வைகள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 10ஆம் திகதி வெளியான திரைப்படம் பராசக்தி , இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 51 கோடி ருத்ரோபை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் பராசக்தி .

ஹிந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல் செய்துள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த (10)ஆம் திகதி திரையரங்குகளில் வௌியானது.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தழுவி உருவாகியுள்ள படத்தில் தணிக்கையில் பராசக்தியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டதுடன்

படத்தின் கதையை பொறுத்தவரை, தாய் தந்தை இல்லாத செழியன் சின்னதுரை சகோதரர்கள் பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர்.கல்லூரி மாணவனாக சின்னதுரை வெளியே தெரியாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.ஒரு கட்டத்தில் சின்னதுரையின் செயல்பாடுகளை செழியனான சிவகார்த்திகேயன் கண்டுபிடிக்கிறார்.

அவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கிறார். ஆனால் அதர்வா தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருக்கிறார்.அதற்குபின் என்ன ஆனது? அவரின் கொள்கை நிறைவேறியதா? அதற்கு செழியன் என்ன செய்தார்? உண்மையில் அவர் யார்? ஏன் இந்தி எதிர்ப்பு பக்கம் அவர் செல்லவில்லை? இவர்கள் இருவருக்கும் திருவாக வரும் ரவி மோகனுக்கும் என்ன சம்மந்தம்? அவருக்கு தமிழ் மீது ஏன் அதீத கோபம்? இந்தி எதிர்ப்பால் என்னென்ன நடந்தது என்பதே இந்த பராசக்தி.

படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் ‘பராசக்தி’ படத்தின் முதல் நாள் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய ‘பராசக்தி’ படம் முதல் நாளில் இந்தியாவில் 12.35 கோடி ரூபாவும்
உலக அளவில் 14.75 கோடி ரூபாய் வரை வசூலித்திருப்பதாகவும் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக படக்குழு க்ஸ் தலத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வௌிவந்த அமரன் மற்றும் மதராஸி ஆகிய படங்களின் வசூல் சாதனையை கூட, இந்தப்படத்தால் முறியடிக்க முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0