ரவி மோகனுக்காகவே ‘பராசக்தி.!
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தப் படத்தினை ரவி மோகனின் தோழியும், பாடகியுமான கெனிஷா திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் ரவி மோகன் ரோல் குறித்து பேசியுள்ளார்.
கொலிவுட் திரையில் முன்னணி நடிகராக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் ரவி மோகன். சார்மிங்கான கதாநாயகனாக கலக்கி வந்த இவர், ‘பராசக்தி’ படத்தின் வாயிலாக முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ரவி மோகனின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் பராசக்தியில் அவருடைய கதாபாத்திரம் குறித்து கெனிஷா பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.பராசக்தி’ திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். திரையுலகை சார்ந்த பிரபலங்களும் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளனர். அந்த வகையில் ரவி மோகனின் தோழியான கெனிஷா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ‘பராசக்தி’ படத்தினை பார்த்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரவி மோகன் ஹீரோவாக நடித்தால் என்ன? வில்லனாக நடித்தால் என்ன? படமே அவரால் தான் ஓடுகிறது. வேறு யாருமே என்னுடைய கண்ணுக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்தார். அதனை நான் பார்த்துள்ளேன். பராசக்தி படத்தை பார்க்கும்போது, அவருக்காகவே இந்தப்படம் எடுத்து இருப்பதை போன்று உள்ளது.