உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 11.01.2026

ராசி பலன்கள் 9 மாதங்கள் முன்
78 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. மனது ஒரு நிலையாக இருக்காது. இதனால் சின்னச் சின்ன பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்படுங்கள். முக்கியமான வேலையை நாளை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன திருப்தி இருக்கும். குடும்பத்துடன் பொங்கலை கொண்டாட தயாராகி விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். நிதிநிலைமை சீராக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேலைகளை சரிவர செய்ய முடியாது. முடிந்தவரை டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்காதீர்கள். முக்கியமான வேலையை மட்டும் கவனமாக செய்து முடிப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு மேலும் அமைதியை தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புது மனிதர்களின் சந்திப்பு நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். புதிய முதலீடுகளை வியாபாரத்தில் செய்து பெரிய அளவில் இலாபத்தை அடைவீர்கள். விவசாயிகளுக்கு இன்று நல்ல இலாபம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குடும்ப பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். நீண்ட நாள் மன கசப்பு நீங்கும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். டென்ஷன் குறையும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்பப் பிரச்சினைகளை சமாளித்து விடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் வரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். சோம்பேறித்தனம் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிரி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்ப ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி பிரச்சினை சரியாகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செய்வீர்கள். பொங்கலுக்கு குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மாலை உடல் சோர்வு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. முன் கோபம் வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்றாலும் வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சினை வீடு தேடி வர வாய்ப்புகள் உள்ளது. நிதானமாக செயல்படுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அதிகம் பேசாதீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

91 0 0