உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
39 பார்வைகள்

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, 16 வயதிற்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் (09.01) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! : அமைச்சர் கே.டி. லால்காந்த மறுப்பு!!

தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த…

7 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இப் பகுதியில் உள்ள…

20 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்றப் பெரும்பான்மை இருந்தாலும் மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் : சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை பலமும் அரசுக்குக் காணப்பட்டாலும், மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது…

19 0 0
இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – நீதி அமைச்சர்  உறுதி

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான…

30 0 0