உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சூரி ஹீரோவாக நடிக்கும் ‘மண்டாடி திரைப்படம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

சூரி ஹீரோவாக நடிக்கும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில் இப்படம் 2026-ம் ஆண்டு கோடையில் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. “படத்தில் இடம்பெறும் படகுப்பந்தய காட்சிகள், இதுவரை காணாத புதிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் காட்சிகள் தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் திரையில் கொண்டுவர, சர்வதேச ஆக் ஷன் நிபுணர்களுடன் இணைந்து படக்குழு பணியாற்றியுள்ளது. பிரபல ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். சுமார் 60 நாட்கள் இந்தப் படத்துக்காக அவர் பணியாற்றிஉள்ளார். ரூ.75 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும்” என்று தயாரிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0