உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கமல்ஹாசன் காட்சிகளுடன் ‘கல்கி’ இரண்டாம் பாகம் ஆரம்பம்.!

சினிமா 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம், புராண–அறிவியல் புனைக்கதை பின்னணியில் உருவாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த இந்தப் படத்தில், கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது.


இந்நிலையில், ‘கல்கி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை இயக்குநர் நாக் அஸ்வின் தொடங்கியுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த கட்டத்தில், கமல்ஹாசன் சம்பந்தமான காட்சிகள் முதன்மையாக படமாக்கப்பட உள்ளன.

தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடித்து வரும் பிரபாஸும் விரைவில் ‘கல்கி’ குழுவில் இணைவார் என கூறப்படுகிறது. அப்போது, பிரபாஸ் – கமல்ஹாசன் இருவரும் நேருக்கு நேர் மோதும் அதிரடியான காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் பாகத்தில் நடித்த தீபிகா படுகோனே இம்முறை படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக யார் நடிக்கப் போகிறார் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0