உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
63 பார்வைகள்

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபராக நுவரெலியா கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளரும், இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் II ஐ சேர்ந்த எஸ் ஜெகதீஸ்வரன் அண்மையில் உத்தியோகப்பூர்வமாக கடமைப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இவர் ஆரம்பக் கல்வியை நு/மெரேய த.ம.வி மற்றும் ராகலை கனிஷ்ட வித்யாலயத்திலும் கற்ற பின்னர் 1997ஆசிரியர் நியமனம் பெற்று ஹ/பிலும்பீல்ட் த. ம. வி கணித பாட ஆசிரியராகவும் பின் மஸ்கலியா சென்.ஜோசப் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியதோடு ஹ /நோர்வுட் த. ம. வி ஆசிரியராக கடமையாற்றும் போது 2016 அதிபர் சேவை தரம் 3 க்கு நியமனம் பெற்று உதவி அதிபராகவும் கடமையாற்றினார்.

2018ஆம் ஆண்டு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு உள்வாங்கபட்டு ஹங்குறாக்கத்த வலய கல்வி காரியலயத்தில் கணித பாட உதவி கல்வி பணிப்பாளராக 2 வருடம் கடமையாற்றி இடமாற்றம் பெற்று நுவரெலியா வலயக் கல்வி காரியலயத்தில் 2021 கடமையாற்றியதோடு கோட்டம் 2 இன் கோட்டக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

மேலும், இவர் கலைமானி பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும் பட்ட பின் கல்வி டிப்ளோமோ பட்டத்தை தேசிய கல்வி நிறுவனத்திலும், கல்வியில் முதுமானி பட்டத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்திலும் நிறைவு செய்துள்ளதோடு தற்போது கல்வி நிர்வாக சேவை தரம் 2 அதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0