உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொஹுவலை துப்பாக்கிச் சூடு; சந்தேகநபர் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
52 பார்வைகள்

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, கொஹுவலை போதியவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

இக் குற்றச் செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட உந்துருளியை வழங்கியதோடு, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த ஒருவரே படோவிட்ட 3ஆம் கட்டப் பகுதியில் வைத்து கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 15 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0