உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண சபைத் தேர்தல் முறைமை; தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை சபையில் சமர்ப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
56 பார்வைகள்

மாகாண சபைகள் தேர்தல் முறைமையைத் தெரிவு செய்வது குறித்து ஆராய்வது தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவால் இந்தப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என்பது குறித்து இந்தத் தெரிவுக்குழு ஆராயவுள்ளது.

அதன்பின்னர், இது தொடர்பான தனது முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தக் குழுவுக்குப் பணிக்கப்படும்.

இந்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மாகாண சபைத் தேர்தல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

55 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0