உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
61 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடுமையான கடல் சீற்றம் காரணமாக கடல் பிரதேசம் பேரிரைச்சலுடன் காணப்படுகின்றது.கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் வாழ்வார வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்

அனர்த்த  நிலைமை காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.தமது அன்றாட  ஜீவனோபாயத்தை பெற்றுக்கொள்ள எவ்வித வழிகளும் இல்லாத நிலையில் அல்லல்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

மீண்டும் மாவட்டத்தில் பாரிய அளவிலான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது இதனால் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூனொச்சிமுனை  உட்பட மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மீனவர்கள் கடும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள மீனவர்களுக்கு சொந்தமான மீன் வாடிகளும் தொடர்ச்சியாக மூடப்பட்டுள்ள நிலையில் கடல் மீன்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் தொடர்ந்தும் பருவ மழை பெய்து வருவதால் பல இடங்களில் நீர் வழங்கி உள்ள அமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

30 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0