உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மின்சாரக் கட்டணத்தை நிச்சயம் குறைப்போம்! – எரிசக்தி அமைச்சர் உறுதி!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
44 பார்வைகள்

மின்சாரக் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குதியை நிச்சயம் நிறைவேற்றும் என எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார்.அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

“அவசரப்படாதீர்கள், இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். எங்கள் கொள்கை அறிக்கையில் 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதாகக் கூறப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பேரிடர்களால் மக்கள் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் நேரத்தில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியிலிருந்து சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் போன்ற மலிவான புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு மாறி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணங்களை 30% குறைப்பதாக உறுதியளித்த போதிலும், அந்த உறுதிமொழிகளைக் கைவிட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை கேள்விக்குட்படுத்தி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

30 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0