உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 05.01.2026

ராசி பலன்கள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாளாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். எதிரிகள் பிரச்சினையால் வந்த துன்பங்கள் விலகும். மன நிம்மதி கிடைக்கும். வருமானம் சீராகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி சந்தோஷத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் பல நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத திருப்பம் அமையும். நெடு நாட்களாக பிரச்சினையில் சிக்கியிருந்த உங்கள் வாழ்க்கை விடுபடும். மன நிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். புதிய வியாபாரம் தொடங்க பிள்ளையார் சுழி போடலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருளை வாங்கலாம். வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும் இருக்கிறது. மேலும் வியாபாரத்தில் கவனத்தோடு செயல்பட வேண்டும். புது மனிதர்களுடைய பேச்சை முழுசாக நம்ப வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன தடைகள் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீர்கள், குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு விடா முயற்சியை மேற்கொண்டால், தடைகளும் படிக்கற்களாக மாறும். பிரச்சினைகளை கண்டு பயந்து ஒதுங்க கூடாது. துணிந்து போராடினால் நிச்சயம் ஜெயிப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானமான அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். எதிரிகளிடமிருந்து விலகி இருப்புகள். பிரச்சினையே வந்தாலும் அதை கடந்து போகும் அளவுக்கு மன வலிமை வெளிப்படும் நாள். இறைவன் மீது நம்பிக்கை அதிகரிக்கும் சிந்தனை மேலோங்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். எதிலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். வியாபாரத்திலும் வேலையிலும் முன்னேற்றம் இருக்கும். நிதிநிலைமை சீராகும். சுப செலவுகள் ஏற்படும். மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். கவனமாக செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. கணவன் மனைவி வாக்குவாதம் வேண்டாம். இறைவழிபாடு செய்வது மன அமைதியை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். விருந்தாளிகளின் வருகை மனதிற்கு அமைதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். உங்கள் மீது விழுந்த பழி விலகும். வருமானம் சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்கள் மீட்க வாய்ப்புகள் உள்ளது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். காதல் கை கூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று விவேகத்தோடு செயல்படுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். பேச்சாற்றல் வெளிப்படும் நாள். சவால்களில் ஜெயிக்க கூடிய நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது. வீட்டில் விட்டுக் கொடுத்து நடந்தால் மட்டுமே நிம்மதி கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும்‌. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். உறவினர்களோடு நல்ல சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க கூடிய வாய்ப்புகள் அமையும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0