உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 04.01.2026

ராசி பலன்கள் 8 மாதங்கள் முன்
21 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளது. பக்தி நிறைந்த நாள். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் மந்தமான சூழ்நிலையே காணப்படும். பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. இன்று விடுமுறை நாள் என்பதால் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாகவே இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம், எதிர்பாராத பரிசுப் பொருள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுடைய மனதில் இன்று தேவையற்ற சின்ன பயம் உண்டாகும். உறவுகளோடு மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்புகளால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆமாங்க நீங்க பேசும் பேச்சுக்கு சுற்றி இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். புது முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. அடுத்தவர்கள் சொல்லக்கூடிய விஷயங்களை, கண்மூடித்தனமாக கேட்டு உங்கள் வாழ்க்கையில் முடிவுகளை எடுக்க வேண்டாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத நல்லது நடக்கும். நிதி நிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கொஞ்சம் வயதானவர்கள், உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். யாரெல்லாம் உங்களை திட்டி திட்டி தீர்த்தார்களோ அவர்களெல்லாம் உங்களை பாராட்டக்கூடிய அளவுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும். நல்ல பெயர் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கும். இன்று விடுமுறை நாள் என்பதால் வேலையில் சின்ன பின்னடைவு உண்டாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நிறைய வேலைப்பளுவும் இருக்கும். இதனால் உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும். நிம்மதியான தூக்கம், நிம்மதியான சாப்பாடு என்று இந்த விடுமுறை நாள் குடும்பத்தோடு செல்ல போகிறது. கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வராத கடன் வசூல் ஆகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். உறவுகளால் ஏற்பட்ட மன கசப்பு நீங்கும். வியாபாரத்தை முன்னேற்ற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தடைகள் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை பேசும்போதும் சரி, பெரிய அளவில் முடிவெடுக்கும் போதும் சரி, ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும். கவனக்குறைவால் பிரச்சினைகள் வரலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் வீட்டில் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை வீட்டில் விருந்தாளிகளின் வருகை மன நிறைவை கொடுக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். எதிலும் தெளிவாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பேச்சு திறமை வெளிப்படும் நாள் அந்தஸ்து உயரும் நாள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0