உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கு நிதியை பெற்றுக் கொடுக்கலாம்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கதிர்காமத்தில் மூன்று இனத்தவர்களும் வழிபடுகிறார்கள். கல்லுமலை பிள்ளையார் ஆலய கட்டுமானத்திற்கும் நிதியைப் பெற்றுக் கொடுக்கலாம் என கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.

வவுனியா, சமனங்குளம், கல்லுமலை பிள்ளையார் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் பௌத்த விகாரை கட்டப்படுவதாக வெளியாகிய செய்தியை அடுத்து அங்கு தொல்பொருட் திணைக்களம், ஆலய நிர்வாகம், கிராம அபிவிருத்தி சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சிரமதானப் பணியை மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன் ஆகியோருடன் இணைந்து பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தொவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நாடு. ஆலய பரிபாலன சபைக்கும் இந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கதிர்காமம் எல்லா மதத்தவர்களும் வழிபடும் தளம். தென் பகுதியில் எல்லோரும் அங்கு சென்று வழிபடுகிறார்கள். அதேபோல் மலைநாட்டிலும் பல இந்து மத ஆலயங்களில் எல்லோரும் வழிபடுகிறார்கள். கொழும்பு மாவட்டத்தில் அதிகமான இந்து ஆலயங்கள் உள்ளது.

மதம் என்பதை வைத்து சிலர் அரசியல் செய்ய முற்படுகிறார்கள். ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு அரசியல் தேவைப்படாது. சமயம் என்பது ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பின்பற்றுகின்ற ஒரு விடயம். இன, மதங்களை கொண்டு செய்யப்பட்ட அரசியல் தோற்கடிக்கப்பட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஆட்சியே உருவாக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் சில இடங்களில் இவ்வாறான மதவாதம் உருவாக்கப்பெறுகிறது. தொல்பொருள் திணைக்களத்தில் தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் இந்து மத தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்கிறார்கள். இன, மத வாத பிரிவுகளுக்கு உட்படாமல் நாம் இருக்க வேண்டும். ஆட்சியாளர்கள் என்ற அடிப்படையில், இன, மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒற்றுமையாக வாழக் கூடிய ஒரு ஆட்சியை உருவாக்க விரும்புகின்றோம். நாட்டில் வாழும் எதிர்கால சந்ததிகள் ஒற்றுமையாக வாழக் கூடிய நிலையை உருவாக்க வேண்டும். அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நாங்களும், எமது கட்சியும் நிறைய வேலை செய்கின்றது.

இந்த கோவிலை கட்டுவதற்கு ஏதாவது உதவி தேவையாக இருந்தால் எமது சமய கலாச்சார அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுத்து உதவி செய்வோம். நிதி பற்றாக்குறை காரணமாக கோவில் கட்டுமானம் இடை நடுவில் நிற்பதாக அறிகின்றோம். எமது சமய கலாச்சார அமைச்சின் ஊடாக அந்த நிதியை பெற்றுத் தரலாம் என நினைக்கின்றோம். ஊடகவியலாளர்கள் இந்த சம்பவத்தை சரியாக கொண்டு செல்ல வேண்டும். மக்களை பிழையாக நடத்த வேண்டாம் எனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் எந்தப் பிளவும் இல்லை! : அமைச்சர் கே.டி. லால்காந்த மறுப்பு!!

தேசிய மக்கள் சக்திக்குள் எவ்விதமான பிளவுகளும் இல்லை எனவும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் என்று கூறப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் அமைச்சர் கே.டி. லால்காந்த…

7 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம் : வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!

நுவரெலியாவில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகிறது. இப் பகுதியில் உள்ள…

20 0 0
இலங்கை செய்திகள்

நாடாளுமன்றப் பெரும்பான்மை இருந்தாலும் மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் : சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதியைப் போலவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மை பலமும் அரசுக்குக் காணப்பட்டாலும், மக்கள் பலத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை மறந்துவிடக் கூடாது…

19 0 0
இலங்கை செய்திகள்

புதிய அரசமைப்பை உருவாக்கும் வாக்குறுதியில் மாற்றமே இல்லை! – நீதி அமைச்சர்  உறுதி

நாட்டுக்குப் பொருத்தமான வகையில் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும், கொடூரமான…

30 0 0