உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பெண்கள் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
21 பார்வைகள்

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடையாளச் சின்னங்கள் அணிவிக்கப்பட்டன. இதற்கு இணையாக, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமன்றி ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றப் பணியாளர்களும் செம்மஞ்சள் அல்லது செம்மஞ்சள் கலந்த ஆடைகளை அணிந்து இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சிக்கு இணையாக, நாடாளுமன்றத்துக்குள் 16 நாட்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இம்முறை உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தின் தொனிப்பொருளாக “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு ஒன்றிணைவோம்: நீதியை நிலைநாட்டுவோம், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்போம், தண்டனையிலிருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டுவருவோம்” என்பது அமைந்துள்ளது. இலங்கையில் இம்முறை இச்செயற்பாட்டு இயக்கம் “இது எனது உரிமை” என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் விடுத்தார். இதன்போது, நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்தை அடையாளப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன் இணைந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் முன்னெடுக்கும் நிகழ்ச்சிக்கு இலங்கை நாடாளுமன்றத்தின் ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் சபைக்கு அறிவித்தார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளைத் தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் கூட்டுப் பங்களிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

16 நாட்கள் செயற்பாட்டு இயக்கமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தன்று ஆரம்பமாகி, டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று நிறைவடையும் உலகளாவிய இயக்கமாகும்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் அனைத்து வகையான வன்முறைகள் தொடர்பிலும் சமூகத்துக்கு விழிப்புணர்வூட்டுதல், இத்தகைய வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் வன்முறைகளற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட ஊக்குவித்தல் ஆகியன இந்தச் செயற்பாட்டு இயக்கத்தின் நோக்கங்களாகும்.

அதற்கமைய, பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்குச் சட்ட மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரதும் அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் அவசியம் என்பதையும் இம்முறை செயற்பாட்டு இயக்கம் வலியுறுத்துகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உந்துருளிகள் திருட்டு; நால்வர் கைது.!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் உந்துருளிகளை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் 19…

10 0 0
இலங்கை செய்திகள்

துப்பாக்கி திருட்டு; நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்.!

கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது, தனது கடமைக்காக வழங்கப்பட்ட T-56 ரக துப்பாக்கியைத் திருடி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களிடம் வழங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற…

26 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00…

28 0 0
இலங்கை செய்திகள்

கனடா புறப்படும் முன் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த புதிய தூதுவர்.!

கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹன அம்பகொல்ல, தனது புதிய இராஜதந்திரப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காகக் கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று…

35 0 0