உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாள்; களைகட்டும் வல்வெட்டித்துறை.!

இலங்கை செய்திகள் 49 நிமிடங்கள் முன்
30 பார்வைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை இன்று வெகுவிமர்சையாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிறந்தநாள் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்தவகையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இடமான வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள காணியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்த பின்னர் அந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப் பதாகை சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சேதப்படுத்தப்பட்டிருந்த அந்தப் பதாகை மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதுடன், அந்தக் காணி சுத்திகரிக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் அலங்கார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு இன்று முற்பகல் 10 மணிக்குப் பிறந்தநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள்.!

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு…

18 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

சிறுவர்களின் கலை ஆற்றுகை நிகழ்வுகளுடன் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. சுப்பர்மடம் பகுதியைச்…

33 0 0
இலங்கை செய்திகள்

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான வானிலையால் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக, அதன் ஆறு வான்கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,…

32 0 0
இலங்கை செய்திகள்

84 கோடி பெண்கள் பா@லியல் ரீதியான வன்முறைகளால் பாதிப்பு – பிரதமர்

உலகளவில் 84 கோடி பெண்கள் பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளுக்கு எதிரான…

31 0 0