உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கனடா புறப்படும் முன் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்த புதிய தூதுவர்.!

இலங்கை செய்திகள் 21 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹன அம்பகொல்ல, தனது புதிய இராஜதந்திரப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காகக் கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று புதன்கிழமை சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக ரோஹன அம்பகொல்லவைச் சந்தித்தார் என்று குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், அவரது புதிய உத்தியோகபூர்வப் பணிகள் வெற்றிகரமாக அமையத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான தற்போதைய நட்புறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் செயற்படுவார் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00…

26 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை.!

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்…

29 0 0
இலங்கை செய்திகள்

பெண்கள் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள்.!

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு…

20 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

சிறுவர்களின் கலை ஆற்றுகை நிகழ்வுகளுடன் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. சுப்பர்மடம் பகுதியைச்…

37 0 0