உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
26 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பருத்தித்துறையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 28 நிமிடங்கள் முன்
34 பார்வைகள்

சிறுவர்களின் கலை ஆற்றுகை நிகழ்வுகளுடன் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு பருத்தித்துறை, சுப்பர்மடம் பொது மண்டபத்தில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

சுப்பர்மடம் பகுதியைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் வசந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் அழைக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

முன்னதாக, சுப்பர்மடம் முனியப்பர் ஆலயத்தில் பொது திருவுருவப்படம் வைக்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுப்பர்மடம் கிராமத்தைச் சேர்ந்த மாவீரர் அறிவின் தந்தை வேலுமயிலும் பொது திருவுருவப்படத்தைத் தாங்கியவாறு வர, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் சுப்பர்மடம் சித்திவிநாயகர் முன்பள்ளி மாணவர்களின் இசை அணிவகுப்பு மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

நிகழ்விடத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் நினைவுச் சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பின்னர் மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சமாகச் சிறுவர்களின் கலை ஆற்றுகை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் எவ்விதக் குறிப்புமின்றி ஆற்றிய உரையும், சிறுமிகளின் நடன நிகழ்வும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு வேட்டி, சேலை என்பவற்றுடன் அந்தந்த மாவீரர்களின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுப்பர்மடம் பகுதி மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண்கள் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த ஆளும், எதிர்க்கட்சி எம்.பிக்கள்.!

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு…

18 0 0
இலங்கை செய்திகள்

தேசியத் தலைவரின் 72ஆவது பிறந்தநாள்; களைகட்டும் வல்வெட்டித்துறை.!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை இன்று வெகுவிமர்சையாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிறந்தநாள் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட…

30 0 0
இலங்கை செய்திகள்

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான்கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான வானிலையால் தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திற்கு வந்து சேரும் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதற்காக, அதன் ஆறு வான்கதவுகள் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,…

32 0 0
இலங்கை செய்திகள்

84 கோடி பெண்கள் பா@லியல் ரீதியான வன்முறைகளால் பாதிப்பு – பிரதமர்

உலகளவில் 84 கோடி பெண்கள் பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். பாலின அடிப்படையிலான தகாத நடத்தைகளுக்கு எதிரான…

31 0 0