கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பு!
கிளிநொச்சி, வன்னேரிக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் விசேட நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
வன்னேரிக்குளம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரின் தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, வருகை தந்திருந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் மதிப்பளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.














