உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோட்டாவுக்கு நீதிமன்றத்தில் இன்று இரட்டைப் பின்னடைவு!

இலங்கை செய்திகள் 8 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவைக் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதேவேளை, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று புதன்கிழமை நீதியரசர் மஹிந்த சமயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதியரசர்கள் குழாம், மேன்முறையீட்டு மனுவை உறுதிப்படுத்துவதற்கான சமர்ப்பணங்களை எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி முன்வைக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்னதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை (ரிட்) மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும், அந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாகாண அதிகாரங்களைப் பறிக்க வேண்டாம் – நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்…!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுகாதாரத் தேவைகளுக்கு விசேட நிதி ஒதுக்கீடு அவசியம் எனவும் மாகாண வைத்தியசாலைகளின் அதிகாரங்களைப் பறிக்க வேண்டாம் எனவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

1 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பு!

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் விசேட நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வன்னேரிக்குளம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின்…

33 0 0
இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

26 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

97 0 0