வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி: இலங்கை – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்
வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் மைதானத்தில் இன்று (25) நடைபெறவுள்ளது.
கிண்ணத்திற்கான இந்தத் தீர்மானமிக்க இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகள் மோதவுள்ளன.
ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான இலங்கை அணி, ஆரம்பச் சுற்று மற்றும் சுப்பர் சிக்ஸ் (Super Six) சுற்றில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுத் தோல்வியே காணாத அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
குறிப்பாக சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஸிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளைத் தலா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான விறுவிறுப்பான போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை நேரப்படி இன்று காலை 10.30 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.


