உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

52 பந்துகளில் இரட்டை சதமடித்து சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

விளையாட்டுச் செய்திகள் 9 மணி நேரம் முன்
112 பார்வைகள்

இந்திய கிரிக்கெட்டின் இளம் அதிரடி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, பட்டியல் ஏ (List A) ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.

கட்டாரின் தொஹாவில் இன்று (24) நடைபெற்ற ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் வீரர்களுக்கான தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணிக்காக விளையாடிய அவர், 28 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

15 வயதான வைபவ், 16 பந்துகளில் அரைச்சதத்தைக் கடந்ததுடன், தனது அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் 28 பந்துகளில் சதம் கடந்து, 52 பந்துகளில் இரட்டை சதமடித்து எதிரணியின் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார்.

இதன்மூலம், அவுஸ்திரேலிய வீரர் ஜேக் பிரேசர் மெக்குர்க் 29 பந்துகளில் சதமடித்து இதுவரை தக்கவைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்னர் தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதமடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தப் போட்டியில் இந்திய ஏ அணி வெறும் 5 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்து, பட்டியல் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் அணியாக அதிவேகமாக 100 ஓட்டங்களைக் கடந்த சாதனையையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி: இலங்கை – அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

வளர்ந்து வரும் நாடுகளுக்கான ஐ.சி.சி. மகளிர் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் மைதானத்தில் இன்று (25) நடைபெறவுள்ளது.  கிண்ணத்திற்கான இந்தத் தீர்மானமிக்க…

114 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலை கோரும் இலங்கை வீரர்கள்!

2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 1,220 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும்…

115 0 0
விளையாட்டுச் செய்திகள்

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை நடத்தும் ஐக்கிய இராச்சியம்; உறுதிபடுத்திய FIFA!

2035 மகளிர் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்று ஃபிஃபா (Fifa) உறுதிப்படுத்தியுள்ளது. 1966 ஆம்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

இறுதிப்போட்டியில் மீண்டும் மோதுமா இந்தியா – பாகிஸ்தான்?

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ண 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ‘ஏ’ மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தொடரின்…

118 0 0