உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சாய் முரளிக்கும் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கும் இடையில் விசேட சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
121 பார்வைகள்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சாய் முரளிக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விசேட சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, தமது கடந்தகாலப் பணிக்கால அனுபவங்களையும், வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய நினைவுகளையும் இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் சாய் முரளியின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும், அவர் புதிய பொறுப்புகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் வடக்கு மாகாண ஆளுநர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் நாகராஜன் ராமசுவாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0