NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார்
NVIDIA நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஜென்சன் ஹுவாங், நிறுவனத்தின் ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற சுமார் ஒரு மணிநேர நிறுவனக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு மன்னிப்புக் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிறுவனத்தின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாகக் கூறி நவம்பர் 12ஆம் திகதி அவர் தனது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
அவருக்கு எதிராகப் பல திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.
அவற்றில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருடனான தொடர்பும் உள்ளடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்ட பெண் ஒருவருடனும் அவர் தொடர்பில் இருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், கடந்த திங்கட்கிழமை என்விடியா நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், தனது மீள் நியமனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டதாக முன்வைக்கப்படும் கருத்துக்களையும் அவர் மறுத்துள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான தீர்மானத்தைப் பணிப்பாளர் சபையே சுயாதீனமாக எடுத்ததாகவும், ஊழியர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


