உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சியில் மீண்டும் எழுந்த மாவீரர் நினைவு வளைவு.!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
106 பார்வைகள்

கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, இளைஞர்களின் முயற்சியால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று புதன்கிழமை அதிகாலை அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது இளைஞர்களின் முழுமையான முயற்சியால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு இன்று அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மாவீரர்களின் நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது என்பதை எம்மவர்கள் தமது செயற்பாட்டின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

இது வெறும் நினைவு வளைவு அல்ல; எம் மண்ணுக்காக உயிர் துறந்த மாவீரர்களின் நினைவுகளையும், அவர்களின் தியாகத்தையும் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பதிவு.” – என்று சிறீதரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

செம்மஞ்சள் நிற உடையில் சஜித்; சபையில் சபாநாயகர் பாராட்டு

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான உலகளாவிய 16 நாள்கள் செயற்பாட்டுப் பிரசாரத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வில் செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து…

25 0 0
இலங்கை செய்திகள்

ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்த பாரவூர்தி.!

கினித்தேன பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (25) புதன்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணியளவில் குருநாகல் பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கிப்…

95 0 0
இலங்கை செய்திகள்

பெண்களின் பிரச்சினையை தீர்க்க வடக்கில் அலுவலகம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்.!

வடக்கு மாகாண பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் முறைப்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கும் தேசிய மகளிர் ஆணைக்குழுவின் மாகாண அலுவலகமொன்றை நிறுவுவது தொடர்பில்…

59 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசைப் பாதுகாக்க வேண்டும் எனவும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும்…

78 0 0