உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 25.11.2026

ராசி பலன்கள் 11 மணி நேரம் முன்
84 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இளைஞர்கள் மாணவர்கள் இன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். காரிய தடை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். அன்றாட வேளையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். மனதிற்கு பிடிக்காத மனிதர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பக்குவமாக நடந்து கொள்வீர்கள். பிரச்சினைகளை சுலபமாக தீர்த்து வைப்பீர்கள். நல்ல அனுபவம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். எதிர்பாராத நன்மைகள் நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீச காத்துக்கொண்டிருக்கிறது. காலை நேரம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு தொடங்கினாலும், போகப்போக இன்று நீங்கள் எதிர்பாராத நன்மைகளை அடைவீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் மனக் கவலையாக தான் இருப்பீர்கள். உங்களுடைய வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக ஓடாது. மந்தமான சூழ்நிலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும். மனதை தளர விடக்கூடாது. இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த விஷயத்திலும் பெரிதாக பாதிப்புகள் வராது. உங்களுடைய சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். எந்த இடத்திலும் நேர்மைக்கு புறம்பாக நடக்காதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். நிம்மதி கிடைக்கும். எதிரி தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சின்னச் சின்ன சிரமங்கள் வரும். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உஷாராக இருக்க வேண்டும். உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய வேலையை நீங்களே செய்ய வேண்டும். உங்களுடைய கடமைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க கூடாது. குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.‌ புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். யாருக்கும் அனாவசியமாக கடன் கொடுக்க வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளோடு வாக்குவாதம் செய்யாதீர்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வேலையில் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடக்க வேண்டும். உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் வந்து தலை மேல் விழும். வேலை செய்வதற்கு நேரமே இருக்காது. பம்பரமாக சுற்றி திரிந்து உங்களுடைய வேலையை செய்வீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரை சுமூகமான போக்கு இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் பெரிதாக எதிர்பார்ப்பு வைக்கக் கூடாது. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் உங்களை காயப்படுத்தும். உங்களுடைய…

130 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையில் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்கவைத்துக்…

153 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நேரத்திற்கு சாப்பாடு, நேரத்திற்கு தூக்கம், என்று இந்த நாள், நல்ல அனுபவங்களை கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக…

172 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 20.11.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். மாணவர்கள்…

173 0 0