இறுதிப்போட்டியில் மீண்டும் மோதுமா இந்தியா – பாகிஸ்தான்?
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கிண்ண 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ‘ஏ’ மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தத் தொடரின் லீக் சுற்றில் பாகிஸ்தான் ‘ஏ’ அணியிடம் இந்தியா ‘ஏ’ அணி 48 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.
இந்த நிலையில், நவம்பர் 29ஆம் திகதி தோஹாவில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மீண்டும் சந்திக்க வாய்ப்புள்ளது.
தற்போது இந்தியா ‘ஏ’ அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகளைப் பெற்று குழு ‘பி’ பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதேவேளை, இந்திய அணியின் நிகர ஓட்ட வேகம் (NRR) (+2.580) ஆகவும், நேபாள அணியின் நிகர ஓட்ட வேகம் (-2.461) ஆகவும் காணப்படுகிறது.
இந்தியா ‘ஏ’ அணி தனது கடைசி லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவதில் முக்கியமானதாக அமையும். அதேவேளை, பாகிஸ்தான் ‘ஏ’ அணி நேபாளத்தை வீழ்த்தினால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும். மாறாக, நேபாளம் வெற்றி பெற்றால் மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெறும் நிலை உருவாகலாம்.
இதனால், அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா ‘ஏ’ மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகள் இறுதிப்போட்டியில் மீண்டும் பலப்பரீட்சை நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


