உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இளைய புரட்சித்தலைவியா? வெட்கக்கேடு! அண்ணாமலை கடும் விமர்சனம்!

இந்திய செய்திகள் 27 நிமிடங்கள் முன்
114 பார்வைகள்

நடிகை த்ரிஷாவின் ரசிகர்கள் ‘இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை’ என்ற பெயரில் புதிய அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளமை தொடர்பில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

திருநெல்வேலியில் த்ரிஷாவின் ரசிகர்களால் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அண்ணாமலை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

த்ரிஷாவின் பெயரில் ‘இளைய புரட்சித் தலைவி’ என்ற அடைமொழியுடன் அமைப்பு தொடங்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது எனத் தெரிவித்த அவர், தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற பலர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னமும் நடிகர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அவர்களைக் கொண்டாடும் கலாசாரம் தொடர்வதாக விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித் தலைவி’ என்ற பெயரில் மன்றமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் வெட்கக்கேடானவை. தமிழகத்தில் ஏராளமான கல்வியறிவு பெற்ற மக்கள் உள்ளனர்.

ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டிய பல பணிகள் இருக்கின்றன. ஆனால், இன்னமும் யாருடைய புகைப்படத்தைப் பையில் வைத்துக்கொண்டு சுற்றுவது என்ற கலாசாரம் தொடர்கின்றது.

இத்தகைய கலாசாரத்தைத் தி.மு.க.வே தமிழகத்தில் உருவாக்கியது. இரண்டு திரைப்படங்களில் நடித்தாலே அவர்களைத் தலைவர்களாகக் கொண்டாடும் நிலை காணப்படுகின்றது. பல கல்வியறிவு பெற்றவர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். மருத்துவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இவர்களில் யாரும் இவ்வாறான அடைமொழிகளுடன் தங்களை முன்னிறுத்துவதில்லை.

இத்தகைய கலாசாரத்தை உருவாக்கியது யார் என்பது குறித்து தி.மு.க. தலைவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வசூல் மட்டுமே தமிழகத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றதா? அதுவே தமிழகத்தின் வளர்ச்சிக்கான அளவுகோலா? முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோருக்குப் பின்னர் கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 11ஆவது இடத்திலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் 7ஆவது இடத்திலும் உள்ளது. அதேவேளை, கடன் பெறுவதில் முதலிடத்தில் இருக்கின்றோம். இவை பெருமைப்படக்கூடிய விடயங்களா?

திருமண மண்டபங்களில் ஒலிவாங்கி கிடைக்கின்றது என்பதற்காக ஆயிரம் பேர் மத்தியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களின் உண்மையான பிரச்சினைகள் என்ன என்பதை நேரடியாக மக்களிடம் சென்று பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.

இவ்விடயங்கள் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் சிந்திக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா’ என மாற்றுவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான தீர்மானம் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி மாநில…

114 0 0
இந்திய செய்திகள்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு கஞ்சா மீட்பு.!

இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப்…

119 0 0
இந்திய செய்திகள்

ராமர் கோயில் நன்கொடை திருட்டு: குற்றப்பத்திரிகையில் முக்கிய நபர்களை காப்பாற்ற முயற்சி!

ராமர் கோயிலில் காணிக்கைகள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக வெளியிப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் முக்கிய சந்தேக நபர்கள் இணைக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர்…

138 0 0
இந்திய செய்திகள்

குடிநீரில் கலப்படமா- FSSAI ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!

FSSAI ஆய்வில் Bisleri போத்தல் தண்ணீரில் Bromate மற்றும் PAHs எனப்படும் ஆபத்தான வேதிப்பொருட்கள் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், போத்தல் தண்ணீரின் பாதுகாப்பு குறித்து…

133 0 0