உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பந்தய நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை; ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 29 நிமிடங்கள் முன்
103 பார்வைகள்

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் களனி, தலுகம டயர் சந்திப் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பந்தய நிலையம் ஒன்றிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து 9,740 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளிகளாகக் காணப்பட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கும் நேற்று திங்கட்கிழமை (23) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி தலா 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குறித்த குற்றச்செயல்கள் தொடர்பான நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பிரபாத் தேசப்பிரிய, ஜயசாந்த பெரேரா, சமன் பிரியதர்ஷன, உபுல் விதாரண மற்றும் ரஞ்சித் எதிரிசிங்க ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நீதிமன்றத்தைத் தவிர்த்துத் தலைமறைவாகியுள்ள முதலாவது மற்றும் 4ஆவது பிரதிவாதிகளுக்கு எதிராக பகிரங்கப் பிடியாணையைப் பிறப்பித்த நீதிபதி, குறித்த இரு பிரதிவாதிகளையும் கைது செய்து தமது நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டனையை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி கொள்ளையிடுவதைப் பொது நோக்கமாகக் கொண்ட சட்டவிரோதக் கூட்டமொன்றை ஒழுங்கமைத்தமை, உரிய அனுமதிப்பத்திரம் இன்றித் துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ‘ஸ்போர்ட்ஸ் டைம்ஸ்’ எனும் நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கிகளைக் காண்பித்து ஊழியர்கள் உள்ளிட்ட அங்கிருந்தோரை அச்சுறுத்தி, அங்கிருந்த பணத்தைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரினால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முதலாவது, 2 ஆவது மற்றும் 4 ஆவது பிரதிவாதிகளை மூன்று குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளிகளாகத் தீர்மானித்த நீதிபதி, குறித்த மூன்று பிரதிவாதிகளுக்கும் தலா 20 வருடங்களும் 6 மாதங்களும் சிறைத் தண்டனையும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 2 ஆவது மற்றும் 5 ஆவது பிரதிவாதிகளுக்குத் தலா 10 வருடங்களும் 6 மாதங்களும் சிறைத் தண்டனையும் விதித்ததுடன், குறித்த சிறைத் தண்டனைகளை ஏககாலத்தில் 10 வருட கால பகுதியில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி தம்மிக உடவத்த மன்றில் வழக்கை நெறிப்படுத்தியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு உணர்வுபூர்வ கௌரவம்.!

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகர சபைக் கட்டடத் தொகுதியிலுள்ள மரக்கறிச் சந்தைக்கு மேல்…

104 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி.!

தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டுப் பருத்தித்துறை நகரில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் விசேட பந்தல்…

105 0 0
இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

119 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

134 0 0