உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாவீரர்களைப் பெற்றெடுத்த தெய்வங்களுக்கு உணர்வுபூர்வ கௌரவம்.!

இலங்கை செய்திகள் 30 நிமிடங்கள் முன்
109 பார்வைகள்

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு வல்வெட்டித்துறையில் நேற்று திங்கட்கிழமை உணர்வுபூர்வமான முறையில் நடைபெற்றது.

வல்வெட்டித்துறை நகர சபைக் கட்டடத் தொகுதியிலுள்ள மரக்கறிச் சந்தைக்கு மேல் மண்டபத்தில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

‘எங்கள் இனத்தின் சுதந்திர மூச்சுக்காகத் தம்மூச்சை மண்ணுக்குள் அடக்கிய மாவீரர் தெய்வங்களைப் பெற்றெடுத்த தெய்வங்களைக் கௌரவிப்போம்’ என்ற தொனிப்பொருளில் வல்வெட்டித்துறை மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை மாவீரர் பணிமனையின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் வல்வெட்டித்துறை நகரபிதாவுமான இராமச்சந்திரன் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிக்கப்பட்டனர்.

வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்திலிருந்து மாவீரர் பொதுத் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்துச் சுடரேற்றியதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மங்கல வாத்திய மரியாதையுடன் ஊர்வலமாக நிகழ்விடத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மாவீரர் மேஜர் அலையழகியின் தந்தை சுந்தரலிங்கம் ஈகைச்சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் மாவீரர் நினைவு ஈகைச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன. தொடர்ந்து மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது.

வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தலைமை உரை இடம்பெற்று, மாவீரர் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்குட்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர், வல்வெட்டித்துறை முன்னாள் நகரபிதா அனந்தராஜ், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசிய ஆர்வலர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பந்தய நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை; ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் களனி, தலுகம டயர் சந்திப் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பந்தய நிலையம் ஒன்றிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து 9,740 ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டமை…

106 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி.!

தமிழ்த் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டுப் பருத்தித்துறை நகரில் மாவீரர் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் நகரின் மத்தியில் விசேட பந்தல்…

109 0 0
இலங்கை செய்திகள்

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் வேலை நிறுத்தப் போராட்டம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது. அதன் இணைத்…

119 0 0
இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் தௌிவூட்டல்

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கமைய,…

134 0 0