உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
20 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு; அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வு.!

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
149 பார்வைகள்

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக இன்று வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் வழங்கிய உத்தரவுகள் வருமாறு,

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மன்று கருதவில்லை.

காபன் டேட்டிங் பரிசோதனைக்கு அப்பால் எலும்புக்கூடுகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

வயது வந்தவர்களுக்கு சொந்தமானவை எனக் கருதத்தக்க எலும்புக்கூடுகள் தொடர்பில் என்பு மாதிரி பரிசோதனையை (Bone Analysis Testing) முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க ஒப்புதல்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை அழிப்பது போல எமது கடல் வளத்தை அழிக்கிறார்.!

அமைச்சர் சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை வரைந்து வரைந்து அழிப்பது போன்று கடல் வளத்தையும் அழிக்கிறார். இதனால் பாரம்பரிய சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சந்திரசேகரன் அமைச்சரா?…

131 0 0
இலங்கை செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டோர் கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் அல்ல.!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்பட்டவர்களோ, கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்களோ அல்ல என்று கட்சியின் ஊடகச் செயலாளர்…

136 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்.!

செம்மணி புதைகுழி விவகாரம் குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.…

132 0 0
இலங்கை செய்திகள்

மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக பொன் மாஸ்டரிடம் சி.ஐ.டி விசாரணை.!

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டரிடம் இன்று (19.11.2026)…

125 0 0