உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
20 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மரண தண்டனை விதிக்கப்பட்டோர் கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் அல்ல.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
135 பார்வைகள்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்பட்டவர்களோ, கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்களோ அல்ல என்று கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் எமது கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் கிடையாது.

கடந்த காலங்களில் பல்வேறு போராட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் குழுக்களாக எமது பிரதேங்களில் செயற்பட்டுள்ளனர்.

அவ்வாறு புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து ராசிக் குழுவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்கள், ராசிக் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனியாக செயற்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2000 ஆண்டுகளின் நடுப் பகுதியில் எமது மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை பேணியிருந்தனர்.

இந்நிலையிலேயே 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிப்படுத்துவது போன்று, சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்சியின் கொள்கையோ வேலைத்திட்டமோ இல்லை.

அவ்வாறு ஏதாவது நடைபெறுமாயின் அவை தனிநபர் தவறுகளாகவே இருக்கும். அவை நீதிமன்றங்களின் ஊடாக அணுகப்பட வேண்டும் என்பதும் நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இவ்வாறான செய்திகள் எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் மக்களையும் சோர்வடைய செய்யக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை அழிப்பது போல எமது கடல் வளத்தை அழிக்கிறார்.!

அமைச்சர் சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை வரைந்து வரைந்து அழிப்பது போன்று கடல் வளத்தையும் அழிக்கிறார். இதனால் பாரம்பரிய சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சந்திரசேகரன் அமைச்சரா?…

128 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்.!

செம்மணி புதைகுழி விவகாரம் குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.…

131 0 0
இலங்கை செய்திகள்

மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக பொன் மாஸ்டரிடம் சி.ஐ.டி விசாரணை.!

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டரிடம் இன்று (19.11.2026)…

124 0 0
இலங்கை செய்திகள்

பழுதடைந்த வெங்காயம் விற்பனை; வர்த்தகருக்கு அபராதமும், சிறைத்தண்டனையும் விதிப்பு.!

பழுதடைந்த வெங்காயத்தை விற்பனை செய்தமை மற்றும் மருத்துவச் சான்றிதழின்றி உணவைக் கையாண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவருக்கு மொத்தமாக 10,000…

122 0 0