உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
20 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு காலமானார்!

இந்திய செய்திகள் 10 மணி நேரம் முன்
137 பார்வைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு , உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பிற்பகல் காலமானார்.

நீண்டகால சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ஆம் திகதி சென்னை MGM Healthcare மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளுக்குப் மத்தியிலும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

இதையடுத்து இன்று பிற்பகல் 2:24 அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் விஜய் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

வி.எஸ். பாபுவின் மறைவுக்கு MGM Healthcare மருத்துவமனை நிர்வாகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் தொடர்பில் சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி…

100 0 0
இந்திய செய்திகள்

பெட்ரோலியப் பொருட்கள் மீதான ஏற்றுமதி வரிகளை உயர்த்தியது இந்திய அரசு!

புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழலில், பெட்ரோலியப் பொருட்களுக்கான வரிகளை மத்திய அரசு தொடர்ந்து மீளாய்வு செய்து வரும் நிலையில், டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு 14…

113 0 0
இந்திய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறப்பு

மண்டல பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று (17) நடை திறக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பூஜைகளுடன் திறக்கப்பட்டது. முதல் நாளில்…

97 0 0
இந்திய செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிறிக்கெட் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன், தமது பயணத்தின் முதல் நாளான இன்று மும்பையில் நடைபெற்ற…

107 0 0