மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக பொன் மாஸ்டரிடம் சி.ஐ.டி விசாரணை.!
கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டரிடம் இன்று (19.11.2026) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
“உண்மையான குற்றச்செயல்களைக் கண்டறிந்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் காட்ட வேண்டிய அக்கறையை விட, தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதிலேயே இந்த அரசாங்கம் அதிக நாட்டம் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


