உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
20 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வேலணை மத்திய கல்லூரியின் வரலாற்றில் முதலாவது பெண் அதிபராக திருமதி நியூட்டன் சுதர்சினி பொறுப்பேற்பு!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
113 பார்வைகள்

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராகவும், பாடசாலை வரலாற்றில் முதலாவது பெண் அதிபராகவும் திருமதி ஜொய்ஸ் நியூட்டன் சுதர்சினி இன்று (19) உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

நீண்டகாலமாக நிலவி வந்த அதிபர் பதவி வெற்றிடத்துக்கான இழுபறிக்கு, புதிய அதிபரின் நியமனத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் இறுதியாண்டுப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பொறுப்பேற்பு நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெற்றது.

விநாயகருக்கான இந்து சமய வழிபாடுகளுடன் ஆரம்பமான நிகழ்வு, பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நடராஜர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புதிய அதிபர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்று, முதலாவது கையொப்பமிட்டு பணிகளை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு புதிய அதிபரை வரவேற்றனர்.

முன்னதாக, வேலணை மத்திய கல்லூரியின் அதிபராகப் பணியாற்றிய கஸ்ரன்ரோய், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று சென்றதைத் தொடர்ந்து, வேலணை மத்திய கல்லூரியில் அதிபர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.

இதனை நிரப்புவதற்காக கல்வித் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

தகைமைகள் மற்றும் நியமன நடைமுறைகளின் அடிப்படையில் திருமதி ஜொய்ஸ் நியூட்டன் சுதர்சினி தெரிவு செய்யப்பட்டு, மாகாணக் கல்வி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இன்று (19) அவர் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

பாடசாலை வரலாற்றில் முதலாவது பெண் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள அவரது நியமனம், கல்லூரியின் நிர்வாகப் பயணத்தில் புதிய அத்தியாயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை அழிப்பது போல எமது கடல் வளத்தை அழிக்கிறார்.!

அமைச்சர் சந்திரசேகரனின் சித்திர ஆசிரியர் சித்திரத்தை வரைந்து வரைந்து அழிப்பது போன்று கடல் வளத்தையும் அழிக்கிறார். இதனால் பாரம்பரிய சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். சந்திரசேகரன் அமைச்சரா?…

132 0 0
இலங்கை செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டோர் கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்கள் அல்ல.!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்பட்டவர்களோ, கட்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர்களோ அல்ல என்று கட்சியின் ஊடகச் செயலாளர்…

136 0 0
இலங்கை செய்திகள்

ராஜ் சோமதேவாவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்.!

செம்மணி புதைகுழி விவகாரம் குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையினை முற்றாக நிராகரித்து சர்வதேச விசாரணையை தாங்கள் கோருவதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டியதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.…

133 0 0
இலங்கை செய்திகள்

மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமைக்காக பொன் மாஸ்டரிடம் சி.ஐ.டி விசாரணை.!

கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மாலதி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டரிடம் இன்று (19.11.2026)…

125 0 0