உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆனைக்கோட்டையில் நல்லது செய்த குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்!

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
86 பார்வைகள்

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை, முள்ளி பகுதியில் நல்லது செய்த குடும்பம் ஒன்று தற்போது அவல நிலையை எதிர்கொண்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
முள்ளி பகுதியில் வெள்ள அனர்த்தம் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்த நிலையில் குறித்த குடும்பம் அந்த வெள்ள அனர்த்தத்தை போக்குவதற்கு தமது காணியூடாக வாய்க்கால் அமைத்து வெள்ளநீரை வெளியேற்ற வழி செய்தது.

இந்நிலையில், சீமெந்தினால் வாய்க்கால் அமைத்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இருப்பினும் அந்த வாய்க்கால் முழுமை பெறாது அதனுள் நீர் தேங்கி நின்று தினமும் துர்நாற்றம் வீசுவதாகவும், நுளம்பு தாக்கம் இருப்பதாக அந்த குடும்பம் தெரிவிக்கிறது.

இது குறித்து மானிப்பாய் பிரதேச சபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், நேற்றையதினம் டெங்கு நுளம்பு பரிசோதனைக்காக அந்த வீட்டுக்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகரிடம் இதுகுறித்து முறையிட்டவேளை, “நீங்கள் எதற்காக உங்களது காணிக்குள் வாய்க்கால் அமைக்க இடம் கொடுத்தீர்கள், அரசாங்க காணியால் வாய்க்கால் அமைக்க விட்டிருக்கலாம் தானே. தேவையில்லாமல் உங்களது காணியை கொடுத்துள்ளீர்கள். இது குறித்து எமக்கு தெரியாது” என அந்த பொதுச் சுகாதார பரிசோதகர் பொறுப்பற்ற விதமாக கூறியதாக அவர்கள் கூறிகின்றனர்.

அந்த வாய்க்காலில்தான் டெங்கு நுளம்பு பரவுவதாகவும், அவற்றை கண்காணிக்காது காணியை பார்ப்பது வேடிக்கையாக இருப்பதாகவும், இனிமேல் வாய்க்கால் பிரச்சினையை சீர் செய்யாமல் டெங்கு நுளம்பு பரிசோதனைகளுக்காக வீட்டுக்கு வரவேண்டாம் என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், அதற்கு தீர்வு வழங்கா விட்டால் வாய்க்காலை தாம் மூடப்போவதாகவும், மக்கள் வெள்ளத்தில் மிதக்கும்போது அங்கு வரவேண்டாம் என அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாலதி நினைவேந்தல் நிகழ்வு : முன்னாள் எம்.பி. கஜேந்திரன் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு, கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம்…

129 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

119 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரத்தால் உயர்த்துமாறு கோரிக்கை

அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை…

128 0 0
இலங்கை செய்திகள்

பங்களாதேஷிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழைப்பு!

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட…

118 0 0