உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொலிஸாரிடம் இருந்து தப்பிக்க இளைஞன் செய்த செயல்; யாழில் பரபரப்பு.!

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
92 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்காகச் சென்ற பொலிஸாரைக் கண்டதும், மேற்படி இளைஞன் தனது கழுத்தைத் தானே அறுத்துத் தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். நல்லூரை அண்டிய பகுதியில் வசிக்கும் 24 வயது இளைஞன் ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக அவரை அழைத்துவர நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர்.

இதன்போது பொலிஸாரைக் கண்ட அந்த இளைஞன், வீட்டின் ஜன்னலை உடைத்து அந்தக் கண்ணாடித் துண்டின் மூலம் தனது கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரால் உடனடியாக மீட்கப்பட்ட மேற்படி இளைஞன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கழுத்தை அறுக்க முயன்றபோதும் அவருக்குப் பாரியளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படாத காரணத்தால், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையின் 24ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாலதி நினைவேந்தல் நிகழ்வு : முன்னாள் எம்.பி. கஜேந்திரன் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு, கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம்…

129 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

119 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரத்தால் உயர்த்துமாறு கோரிக்கை

அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை…

128 0 0
இலங்கை செய்திகள்

பங்களாதேஷிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழைப்பு!

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட…

118 0 0