உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
19 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பங்களாதேஷிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழைப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
117 பார்வைகள்

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் இன்று புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அரசியல், வர்த்தகம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பங்களாதேஷ் பிரதமர் உள்ளடங்கலான அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும், அத்திட்டங்கள் பங்களாதேஷிற்கு முன்மாதிரியாக அமையும் என்றும் பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி, ஆடைத் தொழில், சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்களுக்கு, பங்களாதேஷின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டிஜிட்டல் அமைச்சின் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் சலாஹுதீன் மஹ்மூத், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷா ஆசிப் ரஹ்மான் மற்றும் அவ்வமைச்சின் தெற்காசியப் பிரிவின் உதவிச் செயலாளர் ரஃபித் மஹ்பூப் அஹ்மத் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாலதி நினைவேந்தல் நிகழ்வு : முன்னாள் எம்.பி. கஜேந்திரன் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு, கோப்பாய் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம்…

127 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் என்று நம்பியிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!

அரசு முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும், மக்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம்…

118 0 0
இலங்கை செய்திகள்

வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25 ஆயிரத்தால் உயர்த்துமாறு கோரிக்கை

அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் உழைக்கும் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படாத நிலையில், அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை…

127 0 0
இலங்கை செய்திகள்

ஊழல்வாதிகளைக் கைது செய்கின்றமையை அரசியல் பழிவாங்கல் என்று சொல்லாதீர்கள்!

“ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித அரச நிதியை மோசடி செய்துள்ளார் என அக்கட்சியின் உறுப்பினரான தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொண்டுள்ளார். ஊழல்வாதிகளைக் கைது செய்வதும், சட்ட…

121 0 0