உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
91 பார்வைகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு சிறப்புச் சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகக் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசேட விசாரணை இன்று(16) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான உதவிப் பணிப்பாளர், 2025ஆம் ஆண்டு வழக்கு இலக்கத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குற்றத்துடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய, சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சட்டத்தரணி ரபித் ராஜபக்சவுக்குச் சொந்தமான பல சொகுசு வாகனங்கள் மற்றும் நான்கு வங்கிக் கணக்குகள் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினருடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் மூன்றாவது சந்தேகநபரான அருண சதுரங்கவுக்குச் சொந்தமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியிலும், அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போதும் விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, அவரது மனைவியிடமிருந்து 12 மில்லியன் ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் சரித் அபேசிங்க, ரபித் ராஜபக்ச மற்றும் அருண சதுரங்க ஆகிய மூவரும் முன்னதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முன்னெடுப்பதற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

90 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

90 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

61 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் ஐஸ் போ@தைப்பொருள் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை!

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபா தண்டப் பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.…

89 0 0