உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
59 பார்வைகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மக்களின் குடியிருப்பு மற்றும் வாழ்வாதாரக்காணிகளை விடுவித்தல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளையின் போதான பிரேரணையை வழிமொழிந்து நாடாளுமன்றத்தில் இன்று (16.11.2026) உரையாற்றிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களுக்குச் சொந்தமான பல காணிகள் இன்னமும் பல்வேறு அரச திணைக்களங்கள் மற்றும் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை எல்லைப்படுத்துவதன் மூலம் மக்கள் அங்கு மீள்குடியேறுவதற்கும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தடையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகள் தொடர்பில் 2013ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக 2014ஆம் ஆண்டு மேலதிக சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையிலும், யுத்தத்திற்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதற்குப் பிரதான தடையாகக் காணிப் பிரச்சினை இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டிலும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இன்றுவரை இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

வவுனியா மாவட்டம் உள்ளிட்ட வன்னிப் பகுதிகளில் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்ற காணி தொடர்பான கலந்துரையாடலின்போதும், பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்த வேண்டாம் என்றும், அங்கு மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுமாயின் அவர்களுக்கு குறித்த காணிகளை மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், நீண்டகாலமாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த அனுமதிப்பத்திரக் காணிகள் மற்றும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட LDO அனுமதிப்பத்திரக் காணிகள்கூட தற்போது அரச திணைக்களங்களால் கையகப்படுத்தப்படும் நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மக்களின் காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்கள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உரிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

காணி இல்லாமல் விவசாயம் உள்ளிட்ட எந்தவொரு உற்பத்திப் பொருளாதார நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியாது. ஆகவே, அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினால் முதலில் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனத் சத்தியலிங்கம் எம்பி தனது நாடாளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக பதபெந்திகே, காணி விடுவிப்பு தொடர்பில் 2025இல் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனூடாக காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது பகுதிகளில் தற்போதும் வனவள திணைக்களத்தினரால் எல்லைக்கற்கள் இடப்பட்டு காணிகள் சுவீகரிக்கும் செயற்பாடு தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் அவ்வாறு தற்போது கையகப்படுத்தப்படும் காணிகள் தொடர்பான ஆவனங்களை சமர்ப்பிக்கமுடியுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சருக்கு தெரிவித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

88 0 0
இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

87 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் ஐஸ் போ@தைப்பொருள் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை!

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபா தண்டப் பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.…

87 0 0