உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
88 பார்வைகள்

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப் பொருட்தொகுதியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டகைமுனு வீதிப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் போதைப்பொருள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாக மொனராகலை கொட்டாவ ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய இந்தச் சுற்றுவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரால் குறித்த வீட்டைப் பரிசோதனை செய்தபோது, அங்கு பயணப் பையொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் பொதி செய்யப்பட்டிருந்த 150 கிராம் குஷ் (Kush) போதைப்பொருள், 100 கிராம் ஹஷிஸ் (Hashish) போதைப்பொருள் மற்றும் 40 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தப் போதைப்பொருட் தொதியின் பெறுமதி 15 இலட்சம் ரூபாவை விடவும்  பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வர்த்தகம் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்ததா என்பது தொடர்பிலும், போதைப்பொருள் வர்த்தகத்திற்குப் பின்னால் உள்ள பிரதான வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்காகவும் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சுற்றுவளைப்பின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் இன்று (16) மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

88 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

87 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

58 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் ஐஸ் போ@தைப்பொருள் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை!

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபா தண்டப் பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.…

87 0 0