உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹாரப் பெருவிழா.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
91 பார்வைகள்

கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்வு மிகச் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு கடந்த ஆறு நாட்களாக ஆலயத்தில் விசேட பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருமுறைப் பாராயணங்கள் இடம்பெற்று வந்தன. விரதத்தின் நிறைவு நாளான நேற்று கந்தப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரப் பெருவிழாவைக் காண்பதற்காகப் பெருமளவான பக்தர்கள் ஆலய வளாகத்தில் திரண்டிருந்தனர்.

அதிகாலை முதலே மூலமூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன், விரதமிருந்த அடியவர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபட்டனர்.

மாலை வேளையில் ஆலய வெளிவீதியில் கந்தப்பெருமான் எழுந்தருளி, சூரபத்மனுடன் போரிட்டு வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு அரோகரா கோஷம் விண்ணதிர பக்திபூர்வமாக அரங்கேறியது.

இன்று திங்கட்கிழமை கந்தப்பெருமானின் திருக்கல்யாண உற்சவத்துடன் இந்த வருடத்துக்கான கந்தசஷ்டி விரத உற்சவங்கள் இனிதே நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

91 0 0
இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

90 0 0
இலங்கை செய்திகள்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த…

90 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

61 0 0