உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில். இளைஞர்களுக்கு இடையே மோதல் : கத்தரிக்கோலால் தாக்கப்பட்ட இளைஞன் ப@லி!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
88 பார்வைகள்

யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அச்சேலு பூலசிற்றி பகுதியில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், அச்சேலு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர், மற்றொரு இளைஞரால் கத்தரிக்கோலால் கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவர் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இளைஞரும் தாக்குதல் நடத்திய இளைஞரும் நண்பர்கள் எனவும் தெரியவருகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான மற்றைய இளைஞரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்து பொலிஸ் காவலில் வைத்துள்ளனர்.

அதேநேரம், மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சரித் அபேசிங்கவின் ஆடம்பர சொத்துக்கள் முடக்கம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினருடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சரித் அபேசிங்கவுக்குச் சொந்தமான ஆடம்பர சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

88 0 0
இலங்கை செய்திகள்

15 இலட்சம் பெறுமதியான போ@தைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் இருந்து பொதிகள் போக்குவரத்து சேவை நிறுவனம் மூலம் மொனராகலை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையொன்றில் பொதி செய்து அனுப்பப்பட்ட, 15…

88 0 0
இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகத் தொடரும் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் உற்பத்திப் பொருளாதாரத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களின்…

59 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் ஐஸ் போ@தைப்பொருள் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை!

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபா தண்டப் பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.…

87 0 0